தமிழகத்தில்  வந்தேறிகளின்  ஆட்சியும்பரமக்குடி  படுகொலைகளும்.

                   
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சமீபத்தில் லண்டனில் நடந்த கலவரத்தை ஒப்பிட்டு ஆய்வது இன்றியமையாதது. இந்த இரண்டு நிகழ்விலும் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறான். அது தான் கலவரத்தின்  மூலக்காரணம். இந்த இரண்டு நிகழ்விலும் கலவரம் கையாளப்பட்ட விதம் வெவ்வேறு.

                   
லண்டனில் ஒரு கறுப்பின இளைஞனை போலீசு சுட்டுவிடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் கலவரத்தில் ஈடு படுகிறார்கள். ஒரு வார காலம் அந்தக் கலவரம் நீடிக்கிறது. லண்டனைத் தாண்டிப் பல நகரங்களுக்கும் கலவரம் பரவுகிறது. தீவைத்தல், கொள்ளை என்று மிகப்பெரிய பொருளிழப்பும் ஏற்படுகிறது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமலேயே அந்தப் பெருங்கலவரம் முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.

                    
தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் இளைஞன் கொல்லப்படுகிறான்கொலையை விசாரிக்க வருகிறார் (John) பாண்டியன். அவரது வருகையைத் தடுக்கிறார்கள் காவலர்கள். கலவரம் மூள்கிறது. கலவரத்தால் உயிரிழப்போ பொருளிழப்போ ஏதும் நிகழவில்லைநீர் பீய்ச்சுதல், கண்ணீர்ப்புகை, ரப்பர் துப்பாக்கிஇடுப்புக்குக் கீழே சுடுதல் என்ற படிநிலைகளைக் கடைபிடிக்காமல், துப்பாக்கிச் சூடு விரைவாகவே செயல்படுத்தப்படுகிறது. ஆறு பேர் கொல்லப் படுகின்றனர்.

                   
லண்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பின மக்கள், சிறுபாண்மையினர்ஆட்சியாளர்கள் வெள்ளையர்கள். வெள்ளையர்கள் அம்மண்ணின் மைந்தர்கள்.

                    
தமிழகத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாழ்த்தப்பட்டோர். லண்டனைப்போல, இவர்கள் கொலைக்காக நேரடியாகக் கலவரத்தில் ஈடுபடவில்லைகொலைசெய்யப்பட்ட குடும்பத்தை விசாரிக்கச்  செல்லும் சனநாயக உரிமை மறுக்கப்பட்டதால் கலவரத்தில் ஈடுபட்டனர்இங்கு தாழ்த்தப் பட்டோர் இம்மண்ணின் மைந்தர்கள். தமிழகத்தின் ஆட்சியாளர்கள் வந்தேறி வெள்ளை பிராமணயினம்அதாவது, மண்ணின் மைந்தர்களை வந்தேறி பிராமணரின் அரசு கொன்றுள்ளது.

                   
இக்கலவரத்தை மிக எளிதாகக் கையாண்டு கலவரத்தைத் தடுத்திருக்கலாம் அல்லது உயிரிழப்பு இல்லாமல் ஒடுக்கி இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் குருவிபோல் சுடப்படுவது இயல்பாகவே நடைபெறுகிறதுஇம்மண்ணின் மீது உண்மையான அக்கறையில்லாத வந்தேறிகள் ஆள்வதாலேயே இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றனதமிழகத்தில் ஒவ்வொரு சிக்கலும் அரசியல் ஆதாயங்களோடு, உண்மையான மனிதாபிமானம் இல்லாமல் அனுகப்படுகின்றதுஇம்மண்ணை நேசிக்காத வந்தேறிகள் ஆள்வதால் வரும் பெருங்கேடுகளே இவைஒவ்வொரு சிக்கலையும் ஒரு சாதிச்சண்டையாக வளர்த்தெடுக்கும் போக்கு வந்தேறிகளின் அடிப்படையான அரசியல் வியூகத்தைச் சுட்டி நிற்கின்றன.  வந்தேறிகள் தமிழர்களை ஆளவேண்டுமானால் தமிழர்கள் ஒன்றுபடக்கூடாது என்பது அவர்கள் கற்ற பால பாடம்சாதி பேதங்களோ, தீண்டாமையோ இல்லாதிருந்த தமிழகத்தில் இவற்றை உருவாக்கி வளர்த்தவர்கள் தமிழகத்தைக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஆண்ட வந்தேறி சமூகங்கள் தாம் என்பதையும் நாம் உணரவேண்டும்

                    
எனவே, இந்தக் கலவரத்திற்குக் காரணம் செயலலிதாவின் திறமையின்மையின் வெளிப்பாடு என்பதைவிட வேறு வகையில் பாரக்கவேண்டிய தேவை உள்ளது. சமச்சீர்க் கல்வியை மூட செயலலிதா செய்ததையெல்லாம் இன்னும் நாம் மறந்துவிடவில்லை. செயலலிதா தலைவணங்கும் ஒரே நபரான சோ. ராமசாமி, இரயில்களில் கட்டணங்களுக்கேற்ப பல வகுப்புகள் இருப்பதைப் போலவே, கல்வியிலும் வகுப்பு பேதம் இயல்பானது என்ற கொடிய 'நால்வருணக் கோட்பாட்டை' வெட்கமில்லாமல் பேசினார், எழுதினார் என்பதை இங்கு நினைவு கூர்வது அவசியம். செயலலிதா இந்திய மண்ணில் நால்வர்ணக் கோட்பாட்டை அமல்படுத்திய பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

                   
அத்தகையோரால் தீண்டத்தகாதவராகவும், காணத்தகாதாராகவும்  ஒடுக்கப்பட்ட சமூகம் தான் இன்று துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகியிருக்கிறது. தமிழகத்தைத் தமிழர் ஆளமுடியாததால் ஏற்படும் பலவகைப்பட்ட இழப்புகளில் இந்த ஏழுபேர் இழப்பும் அடங்கும்.

                     
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் லொட்டு லொசுக்கென்று எதற்கெடுத்தாலும் பதவி விலக வேண்டும் என்று சண்டமாருதம் செய்த செயலலிதா அவர்களிடம், தமிழ் மண்ணின் மைந்தர்களாகிய நாம் கேட்பது இது தான்.

பதவி விலகுங்கள்!

தமிழகத்தின் ஆட்சியை ஒரு தமிழனிடம் ஒப்படையுங்கள்!-----------ஆசிரியர் குழு, தமிழர் உலகம்.


கறுப்பும் வேண்டாம்! சிவப்பும் வேண்டாம்!! கறுப்பும்-சிவப்பும் வேண்டவே வேண்டாம்!!!     ----வள்ளுவம் வாழ்வோம்----